பால்கனியில் ஓர் இசைக் கச்சேரி – பார்சிலோனாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்: வீடியோ உள்ளே

 

பால்கனியில் ஓர் இசைக் கச்சேரி – பார்சிலோனாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்: வீடியோ உள்ளே

ஸ்பெயின் நாட்டில் தனிமையை போக்க இரு இசைக் கலைஞர்கள் தங்கள் வீட்டு பால்கனியையே இசை மேடையாக பயன்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் தனிமையை போக்க இரு இசைக் கலைஞர்கள் தங்கள் வீட்டு பால்கனியையே இசை மேடையாக பயன்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

உலகளாவிய தொற்றுநோயாக கொரோனா வைரஸ் மாறியதிலிருந்து மக்கள் பெரும் அச்சத்தில் தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி கலை மற்றும் கலைஞர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக மற்றவர்களை என்டர்டெய்ன் செய்ய தொடங்கியுள்ளனர். அப்படி ஒரு நிகழ்வு ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடந்துள்ளது.

பார்சிலோனாவைச் சேர்ந்த பியானோ கலைஞரான ஆல்பர்டோ கெஸ்டோசோ தனது பியானோவை கொண்டு பால்கனியில் அமர்ந்து இசைக்க தொடங்கினார். டைட்டானிக் படத்தின் “மை ஹார்ட் வில் கோ ஆன்” இசையை அவர் வாசித்தார். இதை அவரது பக்கத்து கட்டிட பால்கனியில் இருந்த சாக்ஸபோனிஸ்டான அலெக்சாண்டர் லெப்ரான் டோரண்ட் பார்த்தார். உடனே அவரும் அவரது பால்கனியில் இருந்தே ஆல்பர்டோ கெஸ்டோசோவுக்கு பக்கவாத்தியமாக சாக்ஸபோனை வாசித்தார். இவர்களது இசைக் கச்சேரியை அக்கம் பக்கத்தினர் ஆரவாரம் செய்து பாராட்டினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது.