பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட சிறுவன் – பசிக்கு புல்லை சாப்பிட்ட அவலம்

 

பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட சிறுவன் – பசிக்கு புல்லை சாப்பிட்ட அவலம்

காணாமல் போன 5 வயது சிறுவன் 24 மணி நேரத்திற்கு பிறகு பாலைவனத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளான்

அர்ஜென்டினா :

குடும்பத்தில் இருந்து தெரியாமல் பிரிந்து சென்று காணாமல் போன சிறுவன் 24 மணி நேரத்திற்கு பிறகு பாலைவனத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளான். 

தொலைந்து போன சிறுவன் 

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த குடும்பம் ஒன்று விடுமுறையை கழிக்க அருகில் இருந்த ஊருக்கு சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர். நாள் முடிவில் அவர்கள் மகனான 5 வயது சிறுவன் தொலைந்து போய் இருப்பது தெரிய வந்துள்ளது.

உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்து விட்டு அந்த குடும்பத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அவர்களுடன் காவல்துறையுடன் சேர்ந்து சுமார் 1000 தன்னார்வலவலர்கள் இணைந்து அந்த சிறுவனை தேடி இருந்திருக்கின்றனர்.

பாலைவனத்தில் ஒருநாள் 

இறுதியில், சிறுவன் தொலைந்து போன இடத்திலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாலைவனத்தில் இருந்து 24 மணி நேரம் கழித்து பத்திரமாக அச்சிறுவன் மீட்கப்பட்டிருக்கிறான்.

சிறிது வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவனுக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். பாலைவனத்தில் பசிக்கு புற்களை சாப்பிட்டுவிட்டு, பாறைகளில் படுத்து உறங்கியதாக ஊடகங்களிடம் சிறுவன் தெரிவித்துள்ளான்.

ஒரு நாள் முழுவதும் பாலைவனத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட சிறுவன் குறித்து தான் இப்போது அந்நாட்டு ஊடகங்கள் பரபரப்பாக பேசி வருகின்றன.