பாலும் பழமும் கைகளில் ஏந்தி… எதனால் இந்த பழக்கம் வந்தது தெரியுமா?

பாலும் பழமும் கைகளில் ஏந்தி… எதனால் இந்த பழக்கம் வந்தது தெரியுமா?

திருமணம் முடிந்த பின்னர் மணப்பெண்ணின் கைகளில் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா?  தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!
புதிதாக மணமாகும் பெண், தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் அவளுக்கு எல்லாமே புதிதாக இருக்கும். கணவர் வீட்டினர் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும். அதிலும் கேலி கிண்டல் ஏற்படலாம்.

bridal

அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளி கூட விஷம் இருக்காதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிப்பதற்காக அவள் கைகளில் பாலும், வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேண்டும் என்பதைக் குறிக்க பழமும் தருகிறார்கள். 
சரி… இதை ஏன் மணமகன் கையிலும் தருகிறார்கள் என்றால், மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது. பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையையும் நெய்யையும் எடுப்பாயாக. பாலை கெட வைத்து விடாதே என குறிக்க பாலும். வாழை மரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுகிறார்களோ அதைப் போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.