பாலுக்காக மட்டும்தான் மாடு என்பது மாதிரி, மார்க் வாங்குறது மட்டும்தானா மாணவனின் கடமை?

 

பாலுக்காக மட்டும்தான் மாடு என்பது மாதிரி, மார்க் வாங்குறது மட்டும்தானா மாணவனின் கடமை?

ஐ.ஐ.டியில் மிக தேர்ந்த அளவில் மதிப்பெண்கள் பெற்று, அமெரிக்காச் சென்று ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலைபார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும் மாணவர்களுக்கு, ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் சக்கர்பெர்க் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்ற உண்மைகூட தெரியாமல் போவதெப்படி?

“இவ்வளவு மோசமாக என் மீதான உங்கள் நம்பிக்கையை தகர்ப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை, நான் இங்கே படிப்பதற்கான தகுதியுடையவன் அல்லன், இந்தளவுக்கு தகுதியற்றவனாக இருந்ததற்காக பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – தற்கொலை செய்துகொண்ட ஐதராபாத் ஐ.ஐ.டி. மாணவன் எழுதிய இறுதி கடிதத்தின் சில வரிகள். ஐ.ஐ.டியில் மிக தேர்ந்த அளவில் மதிப்பெண்கள் பெற்று, அமெரிக்காச் சென்று ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலைபார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும் மாணவர்களுக்கு, ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் சக்கர்பெர்க் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்ற உண்மைகூட தெரியாமல் போவதெப்படி?

IIT Hyderabad

ஐ.ஐ.டியில் இடம் கிடைத்தும் சரியான மார்க்குகள் எடுக்க முடியவில்லை என்ற வருந்தி, கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர். புல்லு வைத்து, தண்ணீர் காட்டி, தீவனம் வைத்து மாட்டை பராமரிப்பது பால் கறக்கத்தான். ஆனால், பாடம் நடத்தி, வசதிகள் செய்துகொடுத்து, பரீட்சையில் பாஸ் மார்க் வாங்கி லாபம் பார்க்க மகனையோ அல்லது மாணவனையோ எந்த பெற்றோரும் பள்ளி/கல்லூரி நிர்வாகமும் வளர்ப்பதில்லை என்ற உண்மையை மாணவர்கள் ஏன் உணர்ந்துகொள்வதே இல்லை.