பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் பிறந்தநாள் இன்று: நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள்!

 

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் பிறந்தநாள் இன்று: நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது 53வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது 53வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

மும்பையில் உள்ள அவரது மன்னத் பங்களாவில் தனது மனைவி, குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அதன் பின் மன்னத் அருகே வாழ்த்துக் கூற கூடிய ரசிகர்களை பார்த்து கையசைத்து, அவர்களின் அன்பை பெற்றுக் கொண்டார்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஷாருக்கானுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். ஷாருக் நடித்துள்ள ‘ஜீரோ’ படத்திற்காக ட்விட்டரில் உலாவும் புதிய இமோஜி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

srk

ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குள்ளனாக நடித்துள்ள ‘ஜீரோ’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அனுஷ்கா ஷர்மா, கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

shahrukhkhan