பாலிவுட் நடிகை பற்றிய வெப்சீரிஸ்… அமலா பாலை உறுதி செய்த படக்குழு

 

பாலிவுட் நடிகை பற்றிய வெப்சீரிஸ்… அமலா பாலை உறுதி செய்த படக்குழு

பாலிவுட் நடிகை பர்வீன் பாபி பற்றிய வாழ்க்கை வரலாறு வெப்சீரிசில் நடிகை அமலா பால் நடிப்பது உறுதியாகி உள்ளது.
1970களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பர்வீன் பாபி. இவரைப் பற்றிய வெப்சீரிஸ் ஒன்று தயாராக உள்ளது. பாலிவுட் முன்னணி இயக்குநர் மகேஷ் பட் இந்த வெப்சீரிஸை இயக்குகிறார்

பாலிவுட் நடிகை பர்வீன் பாபி பற்றிய வாழ்க்கை வரலாறு வெப்சீரிசில் நடிகை அமலா பால் நடிப்பது உறுதியாகி உள்ளது.
1970களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பர்வீன் பாபி. இவரைப் பற்றிய வெப்சீரிஸ் ஒன்று தயாராக உள்ளது. பாலிவுட் முன்னணி இயக்குநர் மகேஷ் பட் இந்த வெப்சீரிஸை இயக்குகிறார். இதில், பர்வீன் பாபி வேடத்தில் அமலாபால் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. இதை தற்போது படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

amala paul

இது தொடர்பாக வெப்சீரிஸ் இயக்குநர் மகேஷ் பட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேஜிக்கின் புதிய தொடக்கம். எங்களின் முதல் வெப் ஷோ, மிக அழகிய நாடக கதை ஒன்று அரங்கேற உள்ளது. இதில் அமலா பால், தஹிர் ராஜ் பாசின், இயக்குநர் புஷ்பதீப் பரத்வாஜ், அம்ரிதா பூரி நடிக்கின்றனர். ஜியோ ஸ்டூடியோ, விஷ்வாஸ் பிலிம்ஸ் தயாரிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பர்வீன் பாபி பற்றிய வெப்சீரிஸ் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாகவும், இயக்குநர் மகேஷ் பட் தெரிவித்துள்ளார்.