பாலிவுட் செல்லும் சிம்புவின் தம்பி..!

 

பாலிவுட் செல்லும் சிம்புவின் தம்பி..!

சிம்பு-நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசையமைப்பாளரான குரலரசன் பாலிவுட் படங்களுக்கு இசையமைக்கவுள்ளார்.

சென்னை: சிம்பு-நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசையமைப்பாளரான குரலரசன் பாலிவுட் படங்களுக்கு இசையமைக்கவுள்ளார்.

பாலிவுட் படங்களுக்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களை கம்போஸ் செய்து வைத்துள்ள குரலரசன் சில ஹிந்தி ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார். அடுத்த மாதம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது பற்றிய பேசிய குரலரசன், தனக்கு சில ஹிந்தி பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும், அது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்றும் கூறிய குரலரசன், பாடல்கள் நன்றாக வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, தனிச்சையாக ஆங்கில ஆல்பம் ஒன்றையும் குரலரசன் கம்போஸ் செய்து முடித்துள்ளார்.

நீண்ட காலமாக இன்டிபெண்டென்ட் ஆல்பம் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தனக்கு தற்போது தான் வாய்ப்பு கிடைத்ததாகவும், அந்த அனுபவம் அருமையாக இருந்ததாகவும் குரலரசன் தெரிவித்துள்ளார். அமெரிக்க கலைஞர்கள் எழுதி, பாடியுள்ள இந்த இன்டிபெண்டென்ட் ஆல்பம் நியூயார்க்கில் ரெக்கார்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.