பாலிவுட்டை பாதித்த ஜே.என்.யூ.பல்கலைக்கழக கலவரம் -அனில்கபூர் முதல் ஆஸ்மி வரை அதிர்ச்சி ..

 

பாலிவுட்டை பாதித்த ஜே.என்.யூ.பல்கலைக்கழக கலவரம் -அனில்கபூர் முதல் ஆஸ்மி வரை அதிர்ச்சி ..

டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைபற்றி பாலிவுட் நடிகர் அனில்கபூர் “இது கண்டிக்கப்பட வேண்டும். இது மிகவும் வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது, நான் பார்த்தது மிகவும் கவலையாக இருந்தது இதனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை”” என்று கூறினார்.

டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைபற்றி பாலிவுட் நடிகர் அனில்கபூர் “இது கண்டிக்கப்பட வேண்டும். இது மிகவும் வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது, நான் பார்த்தது மிகவும் கவலையாக இருந்தது இதனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை”” என்று கூறினார்.

 டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த  தாக்குதல் அரசியல் தலைவர்கள் மற்றும்பிரபலங்களின் கண்டனத்தை ஈர்த்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில்  முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கியதை முழு தேசமும் திகிலுடன் பார்த்தது. இரும்பு கம்பிகள்  மற்றும் பாட்டில்களுடன் ஆயுதம் ஏந்திய ஒரு கூட்டம் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து ஹாஸ்டலில் இருந்து விடுதி வரை மக்களை தாக்கியது .

 

நடிகர்கள் ஸ்வாரா பாஸ்கர், ஷபனா ஆஸ்மி, ராஜ்குமார் ராவ், ரிச்சா சாதா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் சோயா அக்தர் ஆகியோர் பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையை கண்டித்தனர். ஸ்வாரா பாஸ்கர் வளாகத்தில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு கண்ணீர் மல்க ட்விட்டரில்  வேண்டுகோள் விடுத்தார்.

 

மூத்த நடிகர் அனில் கபூர், “வன்முறையால் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதால் , இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. “இது (வன்முறை) கண்டிக்கப்பட வேண்டும். இது மிகவும் வருத்தமாக இருந்தது, அதிர்ச்சியாக இருந்தது, நான் பார்த்தது மிகவும் கவலையாக இருந்தது. என்ன நடந்தது என்று நினைத்து இரவு முழுவதும் தூங்க முடியவில்லை” என்று கூறினார்.

 

“வன்முறையால் எதுவும் சாதிக்க முடியாது . இதைச் செய்தவர் முற்றிலும் தண்டிக்கப்பட வேண்டும்” என்று திரு கபூர் மேலும் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறையில் ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் தலைவர் ஆயி கோஷ் உட்பட  சுமார் 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்தனர். “முகமூடி அணிந்த குண்டர்களால் நான் கொடூரமாக தாக்கப்பட்டேன், எனக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. ,” என்று கோஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுமார் 50  குண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை வளாகத்திற்குள் நுழைந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஜே.என்.யூ மாணவர் சங்கம், தாக்குதல் நடத்தியவர்கள் “அறியப்படாத ஏபிவிபி குண்டர்கள்” என்றும், மாணவர்களோடு  பேராசிரியர்களை கூட அடிப்பதாகவும் ட்வீட் செய்துள்ளார்.

பாஜகவுடன் இணைக்கப்பட்ட ஏபிவிபி என்ற மாணவர் குழுதான்  இந்த தாக்குதலுக்கு காரணம் என்று ஜேஎன்யூ மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மறுபுறம், ஏபிவிபி மற்றும் பல பாஜக தலைவர்கள் இடது சாரி  மாணவர்கள்தான்  வன்முறைக்கு காரணமென குற்றம் சாட்டியுள்ளனர்.