பாலிவுட்டில் லெஸ்பியனாக நடிக்கும் தமிழ் நடிகை?

 

பாலிவுட்டில் லெஸ்பியனாக நடிக்கும் தமிழ் நடிகை?

பாலிவுட்டில் நடிகை சோனம் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏக் லடுகி கோ தேகா தோ ஐசா லகா’ படத்தில் லெஸ்பியன் காதலியாக தமிழ் நடிகை நடித்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை: பாலிவுட்டில் நடிகை சோனம் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏக் லடுகி கோ தேகா தோ ஐசா லகா’ படத்தில் லெஸ்பியன் காதலியாக தமிழ் நடிகை நடித்துள்ளது தெரியவந்துள்ளது.

அனில் கபூர், சோனம் கபூர், ஜூஹி சாவ்லா, ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஏக் லடுகி கோ தேகா தோ ஐசா லகா’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கடந்த 1994ல் வெளியான அனில் கபூரின் ‘1942 எ லவ் ஸ்டோரி’ படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலான ‘ஏக் லடுகி கோ தேகா தோ ஐசா லகா’ என இப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளனர்.

sonamkapoor

வித்தியாசமான காதல் கதை இப்படத்தில் கூறப்பட்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிரைலர் ரிலீசுக்கு பின், இப்படத்தின் டிரைலரில் மறைத்து வைக்கப்பட்ட சீக்ரெட் மற்றும் படத்தில் காதல் கதை குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் லீக்காகி வைரலாகி வருகிறது.

இப்படம் ஓரினச் சேர்க்கை காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் சோனம் கபூர் ஒரு பெண்ணை காதலிப்பது தான் கதையாம். இதில் சோனம் கபூர் காதலிக்கும் அந்த பெண் ஒரு தமிழ் நடிகை ஆவார். சிவகார்த்திகேயன் முதல் விஷ்ணு விஷால் வரை ஏராளமான தமிழ் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரெஜினா என்பது தெரியவந்துள்ளது.

regina

சோனம் கபூரும், ரெஜினாவுக்கும் இடையேயான காதலும், அவர்களது காதலை எதிர்க்கும் குடும்பம் மற்றும் சமூகத்தையும் அவர்கள் எப்படி எதிர்க் கொள்கிறார்கள் என்பதை கூறும் விதமாக இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் டிரைலருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த தகவலுக்கு பின் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.