பாலிவுட்டில் மாஸாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி: எப்படி தெரியுமா?

 

பாலிவுட்டில் மாஸாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி: எப்படி தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளது. அனிருத் இசையில் மரண மாஸான பாடல்கள், டீசரை தொடர்ந்து ‘பேட்ட’ படத்தின் டிரைலர் கடந்த டிச.28 ஆம் தேதி வெளியானது. ஹாஸ்டல் வார்டனாக ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தில் இரண்டு விதமான கெட்-அப்களில் ரஜினிகாந்த் அசத்தியிருந்தார்.முழுக்க முழுக்க ரஜினிஸம் பேசிய இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள பஞ்ச் வசனங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகியது.

இந்நிலையில் ‘பேட்ட’ படத்தின் இந்தி டிரைலர் இன்று மாலை 4மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. முன்னதாக  தெலுங்கிலும் பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகியது. ஆனால் வெளியான  ஒரு மணி நேரத்தில் 97 ஆயிரம் பேர் மட்டுமே பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.