“பாலியல் வன்கொடுமை செய்யும் மிருகங்களுக்குத் தூக்கு தண்டனை சரியான முடிவு” : தமிழிசை சௌந்தரராஜன்

 

“பாலியல் வன்கொடுமை செய்யும் மிருகங்களுக்குத் தூக்கு தண்டனை சரியான முடிவு” : தமிழிசை சௌந்தரராஜன்

மகளிர் தினம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடக்கூடியது அல்ல. பெண் குழந்தை வெளியில் சென்றுவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப முடியவில்லை

உலக மகளிர் தின விழா  திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் திருச்சி நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. அதில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.

ttn

அப்போது  பேசிய அவர், ‘மகளிர் தினம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடக்கூடியது அல்ல. எல்லா நாட்களும் மகளிர் தினம் தான். இருப்பினும்  ஒரு பெண் குழந்தை வெளியில் சென்றுவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப முடியவில்லை. தமிழகத்தில் திருமண வீட்டிற்கு என்ற ஒரு பெண் குழந்தை  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதையெல்லாம் செய்ய எப்படி இந்த மனித மிருகங்களுக்கு எப்படி மனம் வருகிறது.  இப்படிப்பட்ட மிருகங்களுக்குத் தூக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டும். இவர்களிடம் மனிதநேயம் காட்டவேண்டிய எந்த அவசியமும் இல்லை. மிருகங்களுக்கு என்ன மனிதாபிமானம். பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக வையுங்கள். அதற்கு அரசும் கவனம் செலுத்துகிறது. நாமும் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.