பாலியல் பலாத்கார வழக்கில் நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை

 

பாலியல் பலாத்கார வழக்கில் நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை

பாலியல் பலாத்கார வழக்கில் ஆஜராகாத நித்யானந்தாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என கர்நாடக நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது

பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில் ஆஜராகாத நித்யானந்தாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என கர்நாடக நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் பெண் பக்தரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2010-ஆம் ஆண்டு நித்யானந்தா மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு ராமநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் நித்யானந்தா நேரில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், நித்யானந்தா ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், வருகிற ஜனவரி மாதம் 3-ம் தேதி வழக்கு விசாரணைக்கு நித்யானந்தா நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில், ஜாமினில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.