பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு ஆறு மாதத்தில் தூக்கு! மகளிர் ஆணையம் போர்க்கொடி

 

பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு ஆறு மாதத்தில் தூக்கு! மகளிர் ஆணையம் போர்க்கொடி

பாலியல் பலாத்காரத்தில் சிக்கும் நபர்கள் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து ஆறே மாதத்தில் அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மலிவால் கோரிக்கை எழுப்பியுள்ளார்.

பாலியல் பலாத்காரத்தில் சிக்கும் நபர்கள் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து ஆறே மாதத்தில் அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மலிவால் கோரிக்கை எழுப்பியுள்ளார்.

maliwal

இந்தியாவில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல் நடந்துகொண்டே இருக்கிறது. நிர்பயா வழக்கு அதிர்வலையை ஏற்படுத்தினாலும் பாலியல் வன்கொடுமைகள் மட்டும் குறையவே இல்லை. இதைத் தடுக்க கடுமையான சட்டம் வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் மட்டுமல்ல பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு தந்தையும் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்.

crime

வழக்கு விசாரணை, தீர்ப்பு, மேல் முறையீடு, கருணை மனு என்று குற்றவாளிகளுக்கு அளிக்கும் கால அவகாசம்தான் இந்தமாதிரியான சம்பவங்கள் அதிகரிக்கக் காரணமாக உள்ளன. குறைந்தபட்சம் பாலியல் பலாத்கார வழக்குகளிலாவது அரபு நாடுகளைப் போல உடனுக்குடன் தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. ஐதராபாத்தில் இளம் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சூழலில், இந்த கோரிக்கையை டெல்லி மகளிர் ஆணையமும் எழுப்பியுள்ளது.

doctor

இது குறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மலிவால் கூறுகையில், “கடுமையான சட்டங்கள் நிறைவேற்றுவது மட்டுமே தீர்வு இல்லை… அதை எவ்வளவு வரைவாக நிறைவேற்றுகிறோம் என்பது அதைவிட முக்கியமானதாக உள்ளது. பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள்ளாக வழக்கு விசாரணை அனைத்தும் முடித்துத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். 

hang

நாட்டின் கடைக்கோடி பகுதியிலும் கூட நம்முடைய மகள்கள் இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். ஐதராபாத், ராஜஸ்தான் சம்பவங்களில் இரண்டு மகள்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் அலறல் நம்மை நிம்மதியாக இருக்க விடாது. அவர்கள் எந்த அளவுக்கு சித்ரவதையை அனுபவித்திருப்பார்கள் என்று நினைக்கும்போது நமக்கு நடுக்கம் வருகிறது. எனவே, இப்போதே இதற்கான ஒரு முடிவு ஏற்பட வேண்டும்” என்றார்.