பாலியல் தொழிலில் ஈடுபட்ட அதிமுக பெண் பிரமுகர் அதிரடி கைது!

 

பாலியல் தொழிலில் ஈடுபட்ட அதிமுக பெண் பிரமுகர் அதிரடி கைது!

50 வயதாகும் பிரேமா கைலாசகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக உள்ளார். 

பாலியல் தொழிலில் அப்பாவி பெண்களை ஈடுபடுத்தி வந்த அதிமுக பெண் பிரமுகர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

ttn

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா . அதிமுக மாவட்ட பிரதிநிதியான 50 வயதாகும் பிரேமா கைலாசகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக உள்ளார். 

ttn

இந்நிலையில் பிரேமா வடமாநிலத்திலிருந்து வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவந்துள்ளார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு கிடைக்கவே பிரேமா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பூஜா ஆகிய இருவரையும் மடக்கி பிடித்த போலீசார் அவர்களை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் அவர்கள் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி வேலூர் த்திய சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.