பாலியல் தொல்லைகளை பெண்கள் அம்பலப்படுத்த வேண்டும் – சர்ச்சை ஹேஸ்டேக்கிற்கு அனில் கபூர் ஆதரவு

 

பாலியல் தொல்லைகளை பெண்கள் அம்பலப்படுத்த வேண்டும் – சர்ச்சை ஹேஸ்டேக்கிற்கு அனில் கபூர் ஆதரவு

Me Too ஹேஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளைத் தெரிவிப்பது மிகவும் சிறப்பான செயல் என பிரபல நடிகர் அனில் கபூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லி: Me Too ஹேஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளைத் தெரிவிப்பது மிகவும் சிறப்பான செயல் என பிரபல நடிகர் அனில் கபூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு தனிமையில் நேர்ந்த பாலியல் தொல்லைகளைப் பொதுவெளியில் பகிர ‘Me too’ என்ற இயக்கம் ஹேஸ்டேக்காக தொடங்கப்பட்டது. அந்த ஹேஸ்டேக் மூலம் பல முக்கிய பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் தொடங்கி தமிழ் திரையுலகம் வரை புயலை வீசி வரும் அந்த ஹேஸ்டேக்கிற்கு எதிராகவும் சில நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர், “என் வீட்டில் மூன்று பெண்கள் மிகவும் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்களின் கருத்தை கேட்டே நான் செயல்படுகிறேன். அதேபோல், அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரையில், பெண்கள் ஒவ்வொரு அம்சத்திலும் உயர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். Me Too ஹேஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவிப்பது சிறப்பாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

anilkapoor family

பாலிவுட் திரையுலகில் முக்கிய நட்சத்திரமான அனில் கபூரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இவரின் மகள் தான் நடிகை சோனம் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.