‘பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு’… ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய சட்டம்!

 

‘பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு’… ஜெகன் மோகன் ரெட்டியின்  புதிய சட்டம்!

பாலியல் வன்கொடுமையில் சிக்கும் குற்றவாளிகளுக்கு  3 வாரத்திற்குள் தண்டனை கிடைக்கும்படியான புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற  முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில்  அவர்கள் தப்பியோட முயன்றதால்  சுட்டுக்கொன்றதாக  சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

ttn

இதை தொடர்ந்து  ஆந்திராவில்  குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பெண் மருத்துவரின் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஜெகன் மோகன்,  பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை  வழங்கப்படவேண்டும். இனிவரும் காலங்களில்  பெண்கள் குறித்த புகார்களை போலீசார் உடனடியாக பதிவு செய்யவேண்டும். பெண்கள் குறித்த புகார்களில் எல்லைகளைப் பார்க்காமல் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.  பாலியல் வன்கொடுமையில் சிக்கும் குற்றவாளிகளுக்கு  3 வாரத்திற்குள் தண்டனை கிடைக்கும்படியான புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்’ என்றார். 

ttn

இந்நிலையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு  3 வாரங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்க புதிய சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு  ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இந்த மசோதா ஆந்திரா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.மேலும் பெண்கள்  தொடர்பான புகார்களுக்கு எந்த காவல்நிலையத்திலும்  வழக்குப்பதிவு செய்யலாம் என்ற ZERO FIR வசதி உள்ளிட்டவை இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.