பாலா படத்தில் ஹீரோயினாகும் பிக் பாஸ் பிரபலம்!

 

பாலா படத்தில் ஹீரோயினாகும் பிக் பாஸ் பிரபலம்!

பாலா இயக்கவிற்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சென்னை: பாலா இயக்கவிற்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழ் சினிமாவில் சேது, பிதாமகன் போன்று தரமான படங்களை கொடுத்தவர் இயக்குநர் பாலா. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் இயக்கினார். துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்த அப்படம் முழுமையாக நிறைவடைந்த நிலையில்,சில காரணங்களால் கைவிடப்பட்டது. 

arya and adharva

அதையடுத்து பாலா என்ன படத்தை இயக்க போகிறார் என்று ஆவலுடன் தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்யா-அதர்வா வைத்து பாலா புதிய படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

bindu

அதைத்தொடர்ந்து தற்போது அதில் பிக் பாஸ் புகழும், நடிகையுமான பிந்து மாதவி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. 

இதையும் வாசிங்க: பாலாவின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்?