பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வர்மா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

 

பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வர்மா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகிவரும் ‘வர்மா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை: தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகிவரும் ‘வர்மா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி, சக்கப்போடு போட்ட திரைப்படம், அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம், பல பெண்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்த இயக்குநர் பாலா, படத்தின் கதாநாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை தேர்வு செய்தார். படத்தின் கதாநாயகிகளாக மேகா மற்றும் ரைசா நடித்துள்ளனர். அதன்படி, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சரியான வாய்ப்புகள் அமையாமல் தவித்துவந்த நடிகர் விக்ரமுக்கு, ‘சேது’ என்ற திரைப்படத்தை வழங்கி அவரை லைம்லைட்டுக்கு கொண்டு வந்த இயக்குநர் பாலா, தற்போது ‘வர்மா’ படத்தின் மூலம் அவரது மகன் துருவ் விக்ரமை அறிமுகம் செய்கிறார்.

துருவுக்கு இந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரிய என்ட்ரியாக இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், படத்தின் ட்ரெய்லரும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.