பாலச்சந்தர் பற்றிய டாக்குமெண்ட்ரியை இயக்கப்போவது யார் தெரியுமா?

பாலச்சந்தர் பற்றிய டாக்குமெண்ட்ரியை இயக்கப்போவது யார் தெரியுமா?

இயக்குநர் கே.பாலச்சந்தரின் பிறந்தநாள் வரும் ஜூலை 9-ம் தேதி வருகிறது. அது அவரது 90-வது பிறந்தநாள். அதை கொண்டாட சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறது.அந்த ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இயக்குநர் கே.பாலச்சந்தர் பற்றிய ஒரு ஆவணப்படத்தை தயாரிக்க கவிதாலயா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. 

k-balachander

சினிமாவில் இன்றைய தலைமுறை எப்படி ‘நாங்கல்லாம் பாலுமகேந்திரா ஸ்கூல்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வது போல்,சென்ற தலைமுறை சினிமாவில் பாலச்சந்தர் ஸ்கூலில் இருந்து வந்த பல இயக்குநர்கள்,நடிகர்  நடிகையர்  உண்டு.ஆனால்,பாலச்சந்தரின் வாழ்கையை சித்தரிக்கும் ஆவணப் படத்தை எடுக்க,சினிமாவுக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவரை தேர்வு செய்திருக்கிறது கவிதாலயா. அவர் கவிஞர் ரவி சுப்பிரமணியன். இவர் ஏற்கனவே ஜெயகாந்தன், ச.கந்தசாமி போன்ற பிரபல எழுத்தாளர்கள் பற்றி ஆவணப்படங்கள் எடுத்து இருக்கிறார். 

kb-documentary

இப்போது கவிதாலயா நிறுவனம் இவரைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறது. ரவி சுப்பிரமணியன் ஒரு கவிஞர்.முறையாக கர்நாடக இசை கற்றவர். கும்பகோணத்தில் பிறந்த ரவி சுப்பிரமணியன் இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். பாலச்சந்தரின் கதையைச் சொல்ல சினிமாக்காரர்களை விட ஒரு கவிஞரே பொருத்தமானவர் என்று கவிதாலயா நினைக்கிறதோ?!.