பாலகோட் தாக்குதல் இந்தியாவின் தரமான சம்பவம்…….6 மாதத்துக்கு பிறகு உண்மையை ஒப்புக் கொண்ட இம்ரான் கான்

 

பாலகோட் தாக்குதல் இந்தியாவின் தரமான சம்பவம்…….6 மாதத்துக்கு பிறகு உண்மையை ஒப்புக் கொண்ட இம்ரான் கான்

பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம் மீது இந்திய விமான படை நடத்திய தாக்குதலை சுமார் 6 மாதங்களுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை மோத செய்து வெடிக்க செய்தான். இதில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 45 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ இ முகமது தீவிரவாத அமைப்பு. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின்  பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமான படை விமானங்கள் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது.

இந்திய போர் விமான தாக்குதல்

இந்திய விமான படை தாக்குதலில் அந்த முகாம் முற்றிலும் அழிந்ததோடு, சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என இந்திய ராணுவம் தகவல் தெரிவித்தது. ஆனால், இந்திய போர் விமானங்கள் மரத்தின் மீதுதான் குண்டுகள் வீசிதான் சென்றன பாகிஸ்தான் உண்மையை சொல்லாமல் நாடகம் ஆடியது. ஒருநாள் உண்மை எப்படியும் வெளியே வந்துதானே ஆக  வேண்டும். தற்போது அந்த உண்மை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வாயாலே வெளியே வந்து விட்டது.

இந்திய போர் விமானங்கள் தாக்குதல்

பாகிஸ்தானில் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தோன்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், ஆசாத் காஷ்மீரில் (பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்) இந்தியா மிகப்பெரிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட்டில் நடத்திய தாக்குதலை காட்டிலும் மிகவும் மோசமான தாக்குதலை நடத்த இந்தியா செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். ஆக, இந்தியா  விமானபடை விமானங்கள் பாலகோட்டில் நடத்திய தாக்குதலை சுமார் 6  மாதங்களுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளார்.