பார்… முழுசா ஆர்.எஸ்.எஸ். ஆளாகிவிட்ட ரவீந்திரநாத்தைப் பார்!

 

பார்… முழுசா ஆர்.எஸ்.எஸ். ஆளாகிவிட்ட ரவீந்திரநாத்தைப் பார்!

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுவருகிறார்” என வழக்கமான அரசியல் பேசிய எம்.பி., திடீரென காவிவேசம் பூண்டார். “ நாம் அனைவரும் இணைந்து, வலிமையான புதிய பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் மற்றது” என்றாரே பார்க்கலாம்.

‘பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க’ என எப்போதும் சொல்லாவிட்டாலும், தேர்தல் அறிக்கையின்போதாவது அண்ணாவை ஞாபகத்திற்கு கொண்டுவருவார் ஜெயலலிதா. அண்ணாவின் பெயரில் கட்சி இருக்கிறது, பெயரில் மட்டும்தான் திராவிடம் இருக்கிறது, ஆனாலும் அண்ணாவின் கொள்கைக்கு நேர்மாறான கொள்கைக்கு தோள்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வீரவசனம் எல்லாம் பேசவேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார். தேனி, சின்னமனூர் பகுதியில் இந்து முன்னணி சார்பாக நடத்தப்பட்ட வினாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொண்ட ரவீந்திரநாத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

OPSR with Hindu Munnani

“கடந்த ஆண்டு, இதே சின்னமனூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நான்தான் தொடங்கிவைத்தேன். தற்போது, நாடாளுமன்ற உறுப்பினராக இந்த ஊர்வலத்தைத் தொடங்கிவைத்திருக்கிறேன். கடந்த ஆண்டு பேசும்போது, மோடியே அடுத்த பிரதமராக வருவார் எனக் கூறினேன். அதேபோல அவரே பிரதமராக வந்துவிட்டார். இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுவருகிறார்” என வழக்கமான அரசியல் பேசிய எம்.பி., திடீரென காவிவேசம் பூண்டார். “ நாம் அனைவரும் இணைந்து, வலிமையான புதிய பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் மற்றதுஎன்றாரே பார்க்கலாம். கங்கா சந்திரமுகியா நின்னா, கங்கா சந்திரமுகியா நடந்தா, கங்கா சந்திரமுகியாவே தன்னை நினைச்சுக்கிட்டா கதையாகத்தான் முடியபோகிறது!