பார் நாகராஜனிடம் சிக்கிக் கொண்ட அதிமுக பிரமுகர்களின் ஆபாச வீடியோக்கள்?!

 

பார் நாகராஜனிடம் சிக்கிக் கொண்ட அதிமுக பிரமுகர்களின் ஆபாச வீடியோக்கள்?!

பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பார் நாகராஜனிடம் அதிமுக பிரமுகர்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பார் நாகராஜனிடம் அதிமுக பிரமுகர்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பார் நாகராஜன் ஜாமினில் வெளியே இருக்கிறார். தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி வழக்கில் நாகராஜனுக்கு உடனடியாக ஜாமின் கிடைக்க காரணம், அவர் அதிமுக உறுப்பினராக இருந்ததால்தான் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக இப்படி ஒரு சிக்கலை சந்திக்க விரும்பவில்லை. பார் நாகராஜனை அதிமுக தரப்பு கட்சியை விட்டு நீக்கியது. அதன்பிறகு பார் நாகராஜனும் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளான் என ஒரு வீடியோ வெளியானது. அதற்கு பார் நாகராஜன் மறுப்பு தெரிவித்தது நாம் அறிந்த கதை. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அதிமுக பிரமுகர்கள் சிலரின் ஆபாச வீடியோக்கள் நாகராஜனிடம் சிக்கியுள்ளதாம்.

கடந்த சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக பிரமுகர் ஒருவரின் ஆபாச வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் படுக்கையறைக் காட்சிகள் வெளியாவது தமிழகத்துக்கு புதிதல்ல. ஆனால் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பிரமுகர்களின் ஆபாச வீடியோக்கள் வெளியானால் அது அக்கட்சியை பெரிதும் பாதிக்கும். அதனால் பார் நாகராஜனிடம் சிக்கியுள்ள வீடியோ ஆதாரங்களை அழிக்கவே அவனுக்கு விரைவாக ஜாமின் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக பல பெண்களை பாலியல் சித்ரவதை செய்து மிரட்டி பணம் பிடுங்கிய கும்பலிடம் அதிமுக பிரமுகர்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கியிருப்பது அக்கட்சிக்கு நீங்காத அவப்பெயரை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.