பார்த்திபன் கதையைத் திருடி விருதுகளை வாங்கினாரா? சர்ச்சையில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம்!

 

பார்த்திபன் கதையைத் திருடி விருதுகளை வாங்கினாரா? சர்ச்சையில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம்!

கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என்று ஒரே ஆள் அத்தனை வேலைகளையும் சுமந்து ‘ஒத்த செருப்பு’ படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார் நடிகர், இயக்குநர் பார்த்திபன். இந்த திரைப்படம் விருதுகளையும் குவித்து, விமர்சகர்களிடையே பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படம்,  தான் 2016ல் இயக்கி இணையதளத்தில் வெளியிட்டுள்ள ‘கர்மா’ படத்தின் கதையை ஒத்திருக்கிறது. இருந்தாலும் நான் சுய விளம்பரங்களைத் தேடவில்லை

கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என்று ஒரே ஆள் அத்தனை வேலைகளையும் சுமந்து ‘ஒத்த செருப்பு’ படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார் நடிகர், இயக்குநர் பார்த்திபன். இந்த திரைப்படம் விருதுகளையும் குவித்து, விமர்சகர்களிடையே பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படம்,  தான் 2016ல் இயக்கி இணையதளத்தில் வெளியிட்டுள்ள ‘கர்மா’ படத்தின் கதையை ஒத்திருக்கிறது. இருந்தாலும் நான் சுய விளம்பரங்களைத் தேடவில்லை.

parthiban

பார்த்திபனுக்கு வாழ்த்துகள்! என்று விளக்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் அர்விந்த். அவர் வெளியிட்டுள்ள விளக்க கடிதத்தில், ‘தற்போது வெளியாகியுள்ள திரு.இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களின் ஒத்த செருப்பு என்ற திரப்படத்திற்கும் எனது தயாரிப்பு  மற்றும் இயக்கத்தில் 2016ம் இணையதளத்தில் வெளிவந்த கர்மா திரைப்படத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகளை திரைத்துறை நண்பர்கள் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து சொல்லி வருகிறார்கள். முதன் முதலாக ஒருவரே நடித்து, இயக்கி, தயாரித்த படம் என்று ஒத்த செருப்பு திரைப்படம் விளம்பரப்படுத்தப்படுவதை நான் அறிவேன். ஆனால் உண்மையாக அந்த பெருமை கர்மா திரைப்படத்தையே சாரும். இதை பெரிதுபடுத்தி விளம்பரம் தேடும் எண்ணம் எனக்கு இல்லை. திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் மிக சிறந்த கலைஞர். மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஒத்த செருப்பு படத்தை திரையரங்கில் ஓட வைக்க முயற்சி செய்து வருகிறார். அவர் வெற்றியடைய வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த அறிக்கை ஒரு விளக்க பதிவு மட்டுமே’ என்று கூறியிருக்கிறார்.
பார்த்திபன், 2016 ம் ஆண்டிலேயே வெளியிடப்பட்ட ‘கர்மா’ படத்தின் கதையைத் தழுவி தான் ‘ஒத்த செருப்பு’ படத்தின் கதையை தயார் செய்திருந்தார், இயக்குநர் அர்விந்திற்கு அதற்கான மரியாதையையும், அங்கீகாரத்தையும், கதை உரிமைக்கான பணத்தையும் கொடுத்திருக்க வேண்டும். செய்வாரா பார்த்திபன்?