பாரீஸ் ஏலத்தில் ரூ.3.70 கோடிக்கு விற்பனை – ரூபிக் கியூப்ஸின் மோனாலிசா ஓவியம்

 

பாரீஸ் ஏலத்தில் ரூ.3.70 கோடிக்கு விற்பனை – ரூபிக் கியூப்ஸின் மோனாலிசா ஓவியம்

ரூபிக் கியூப்ஸ் விளையாட்டு பொருட்களால் உருவாக்கப்பட்ட மோனாலிசா ஓவியம் ரூ.3.70 கோடிக்கு ஏலத்தில் விற்பனை ஆனது.

பாரீஸ்: ரூபிக் கியூப்ஸ் விளையாட்டு பொருட்களால் உருவாக்கப்பட்ட மோனாலிசா ஓவியம் ரூ.3.70 கோடிக்கு ஏலத்தில் விற்பனை ஆனது.

உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்று மோனலிசா ஓவியம். லியனார்டோ டாவின்சி இந்த ஓவியத்தை வரைந்தார். இந்த நிலையில், குழந்தைகளின் அறிவு திறனை அதிகரிக்க உதவும் ரூபிக் கியூப்ஸ் விளையாட்டு பொருளால் உருவாக்கப்பட்ட மோனாலிசா ஓவியம் பாரீஸ் ஏலத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.70 கோடி) விலை போனது. கண்கவர் வண்ணங்களில் சிறிய பிளாஸ்டிக் சதுரங்களை வைத்து தத்துரூபமாக இந்த ஓவியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ttn

பாரீஸ் நகரில் ஒரு நவீன கலை ஏலத்தில் 480,200 யூரோக்களுக்கு இந்த ஓவியம் விற்கப்பட்டுள்ளது. மொத்தம் 330 ரூபிக் க்யூப்ஸால் இந்த ஓவியம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக 1,50,000 யூரோக்கள் வரை இந்த ஓவியம் விற்பனை ஆகும் என்று நினைத்தனர். ஆனால் அந்த தொகையை மிஞ்சி இந்த ஓவியம் பணத்தை அள்ளியுள்ளது.