பாரி, ஓரி, காரிக்குப் பிறகு மாவிலங்கை சரவணன்தான்!

 

பாரி, ஓரி, காரிக்குப் பிறகு மாவிலங்கை சரவணன்தான்!

தோராயமாக 2 லட்சம் செலவு செய்து கிழாய் கிணறு அமைத்து சாகுபடி செய்துவருகிறார். விவசாயத்திற்கு போக, மீதமுள்ள தண்ணீரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர கால்வாய் வழியாக ஊர் பொதுக்குளத்தில் நிரப்பி, இப்பகுதியில் வசிக்கும் 300 க்கும் மேற்பட்ட மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டினை தீர்த்து வருகிறார்.

விதைநெல் வாங்க, பூச்சிக்கொல்லிகள் வாங்குவதற்கெல்லாம் கடன் வாங்கியோ நகையை அடகுவைத்தோ காலத்தை ஓட்டும் விவசாயிகளுக்கு அடுத்த பேரிடியாக தண்ணீருக்கும் லோன் வாங்கவேண்டிய கட்டாயம் இவ்வளவு விரைவில் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். உங்களுக்கு குடுத்துட்டு நாங்க என்ன பண்றது, என இருக்கும் தண்ணீரையும் தங்களுக்காகவே வைத்துக்கொள்ளும் மனிதர்கள் இருக்கும்போது, தன் சொந்தப்பணத்தை செலவு செய்து ஊர்மக்களுக்கு தண்ணீர் தருகிறார் நாகை மாவட்டம் மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த சரவணன்.

Canal

தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் வயலில், தோராயமாக 2 லட்சம் செலவு செய்து கிழாய் கிணறு அமைத்து சாகுபடி செய்துவருகிறார். விவசாயத்திற்கு போக, மீதமுள்ள தண்ணீரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர கால்வாய் வழியாக ஊர் பொதுக்குளத்தில் நிரப்பி, இப்பகுதியில் வசிக்கும் 300 க்கும் மேற்பட்ட மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டினை தீர்த்து வருகிறார். மக்களுக்கு மட்டுமன்றி, கால்நடைகள் மற்றும் பறவைகளின் தேவைகளுக்கும் பயன்படுகிறது குளத்து நீர் பயன்படுகிறது. கால்வாய் வழியாக பாயும் நீரினால் நீராதாரம் பெருகி, கிராமமே பசுமையாக காட்சியளிக்கின்றது. பாரி, ஓரி, காரி என கடையேழு வள்ளல்கள் வரிசையில் மாவிலங்கை சரவணனையும் சேர்க்கலாமே!