பாரிவேந்தர் எம்.பியின் ஃபர்ஸ்ட் பால் சிக்ஸ் – பெரம்பலூருக்கு அடித்தது லக்

 

பாரிவேந்தர் எம்.பியின் ஃபர்ஸ்ட் பால் சிக்ஸ் – பெரம்பலூருக்கு அடித்தது லக்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது, அதுகுறித்த விவாதம் மாநிலங்களைவையில் காரசாரமாக நடந்தபோது, அதிமுகவின் நவநீதகிருஷ்ணன் எழுந்து, “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்” என எம்.ஜி.ஆர் பாடலைப் பாடி தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தினார். இன்னும் சொல்லப்போனால், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவின் அன்புமணிதான் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களிலேயே குறைந்தபட்சமாக அவைக்கு வருகை தந்தவர் என்ற அவப்பெயரை பெற்றவர்.

எதிர்க்கட்சியாக தேர்வாகியிருக்கும் 37 எம்.பிக்களால் என்ன செய்துவிட முடியும் என்ற அதிமுக கூட்டணியினரின் கேள்விகளுக்கு, பாராளுமன்ற உறுப்பினராக முறையாக பதவியேற்கும் முன்பே பதில் சொல்லியிருக்கிறார் திமுக கூட்டணியின் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர். சென்னையில் இயங்கும் இவருடைய எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும், தலா 50 பேர் வீதம், மொத்தம் 300 பேருக்கு இலவச உயர்கல்வி வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் பாரிவேந்தர்.

SRM University

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது, அதுகுறித்த விவாதம் மாநிலங்களைவையில் காரசாரமாக நடந்தபோது, அதிமுகவின் நவநீதகிருஷ்ணன் எழுந்து, “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்” என எம்.ஜி.ஆர் பாடலைப் பாடி தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தினார். இன்னும் சொல்லப்போனால், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவின் அன்புமணிதான் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களிலேயே குறைந்தபட்சமாக அவைக்கு வருகை தந்தவர் என்ற அவப்பெயரை பெற்றவர்.

ஒக்கி கோரப்புயலின் தாண்டத்தின்போதோ, அதன்பின் கஜா புயலின்போதோ, அதிமுக, பாஜக கூட்டணி எம்.பிக்களால் மத்திய அரசிடம் இருந்து குறைந்தபட்ச உதவியைக்கூட பெற்றுத்தர முடியவில்லை. திமுக கூட்டணி உறுப்பினர்கள் இப்போது தேர்வாகி இருப்பதால், இவர்கள் 37 பேரும் டில்லிக்குச் சென்று வானத்தை வளைத்துவருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், எண்ணிக்கை முக்கியமல்ல. எண்ணமே என்பதை செயல்படுத்தியிருக்கும் பாரிவேந்தருக்கு, அவர்மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும்போதும், வாழ்த்துக்களை தெரிவிப்போம். அது மற்ற எம்.பிக்களையும் உற்சாகப்படுத்தும்.