பாராளுமன்றத்திற்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!! பப்புவா நாட்டில் உச்சகட்டம்

பாராளுமன்றத்திற்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!! பப்புவா நாட்டில் உச்சகட்டம்

இந்தோனேசிய நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக பப்புவா நாட்டில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்களை எரித்ததோடு மட்டுமல்லாமல் தற்போது பாராளுமன்றத்திற்கும் தீ வைத்து போராட்டத்தை புதிய உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

1963 ஆம் ஆண்டு பப்புவா நாடானது தன்னை தானே தனி நாடாக அறிவித்துக் கொண்டது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நாட்டில் ஏராளமான இயற்கை வளங்கள் நிறைந்துள்ளதால் இதனை விட்டு கொடுக்க மறுத்து இந்தோனேசியாவின் ஒருபகுதியாக வலுக்கட்டாயமாக இணைத்துக்கொண்டு  தன்னாட்சி செய்யலாம் என்று தெரிவித்தது.

இதனை எதிர்த்து பிரிவினைவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி விடுவிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதற்கு இடையில் கடந்த 17ஆம் தேதி இந்தோனேசியாவின் சுதந்திர தினத்தன்று அந்த அரசை எதிர்த்து பப்புவா நாட்டில் கலவரங்கள் பெரிதும் வெடித்தன. 

முன்பை விட ஒருபடி மேலே சென்று பல அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன. அத்துடன் விடாமல் பப்புவா நாட்டு பாராளுமன்றமும் தீ வைக்கப்பட்டு போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. பப்புவா நாட்டின ராணுவம் மற்றும் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.