பாராட்டுக்கு ஏங்கும் மனசு!

 

பாராட்டுக்கு ஏங்கும் மனசு!

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சதுரங்க போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. வெகு ஆர்வமாக அன்று அதிகாலையிலேயே எழுந்து, கிளம்பி பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்தான் அந்த மாணவன். தன் திறமையை இன்று பள்ளி முழுவதுமே பாராட்டப் போகிறது என்று உற்சாகமாகப் போட்டிகளில் கலந்துக் கொண்டான். அன்றைய போட்டியில் அவன் எதிர்பார்த்தப்படியே முதல் பரிசும் கிடைத்தது. அன்றைய விழா நாயகன் அவன் தான். அவன் வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரும் பாராட்டினார்கள்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சதுரங்க போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. வெகு ஆர்வமாக அன்று அதிகாலையிலேயே எழுந்து, கிளம்பி பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்தான் அந்த மாணவன். தன் திறமையை இன்று பள்ளி முழுவதுமே பாராட்டப் போகிறது என்று உற்சாகமாகப் போட்டிகளில் கலந்துக் கொண்டான். அன்றைய போட்டியில் அவன் எதிர்பார்த்தப்படியே முதல் பரிசும் கிடைத்தது. அன்றைய விழா நாயகன் அவன் தான். அவன் வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரும் பாராட்டினார்கள்.

school boy

வீட்டிற்குச் சென்றதும், இதைச் சொன்னால் நம் வீட்டில் உள்ளவர்கள் எப்படி பாராட்டுவார்கள் என்று மனம் அசைப்போடத் துவங்கியது. அன்று மாலை பரிசு பெற்ற விவரத்தை வீட்டிற்குச் சென்றவுடன் ஆர்வத்துடன் அவன் தந்தையிடம் சொல்ல, அவரோ பெரிதாக ஆர்வம் காட்டாமல்  ஏனோ தானோவென்று பாராட்டி விட்டுச் சென்றார். அதே விஷயத்தை பாட்டியிடம் எடுத்துச் சொன்னான். பாட்டியும் மேலோட்டமாக பேரனைப் பாராட்டி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றார். தாத்தாவிடம் சொன்னான். தாத்தா, அப்படியா என்கிற ஒரு வார்த்தையோடு முடித்து விட்டார். 
‘அம்மா நிச்சயம் கேட்பார்’ என்று முழு நம்பிக்கையோடு அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்தான். அம்மா அலுவலகத்தில் இருந்து வந்ததும், தான் வென்ற செய்தியை உற்சாகமாகக் கத்தியபடி சொன்னான். அம்மா இரு நாட்டின் பிரதமர்கள் கைகுலுக்குவது போல அவன் கைகளைக் குலுக்கி வாழ்த்து சொன்னார். அப்புறம் தன் வேலையைப் பார்க்கப் போனார். அன்று இரவு உணவு சாப்பிட அனைவரும் காத்திருக்க, சிறுவனாகிய இவன் மட்டும் வரவில்லை. அம்மா போய் அவனறையில் பார்த்தால், அழுது கொண்டே படுத்திருந்தான். 
‘‘ஏன் அழுகிறாய்?’’ 
‘‘நான் எவ்வளவு கஷ்டமான ஒரு போட்டியில் பரிசு வாங்கி வந்திருக்கிறேன். என்னை ஏன் யாரும் மனமாரப் பாராட்டவில்லை? அப்பா, தாத்தா, பாட்டி, நீங்கள் என்று அனைவரும் சம்பிரதாயத்துக்கு என்னை புகழ்ந்தீர்களே தவிர, மனமார பாராட்டவில்லை.’’
‘‘சரி, போன வாரம் அம்மா ஒரு செமினாரில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன். அப்போது நீ எப்படிப் பாராட்டினாய்? கேட்டு விட்டு ஒரு வாழ்த்து சொல்லி விட்டுப் போய்விட்டாய். உன் அப்பா அவர் பள்ளி நண்பர்களை பல வருடங்கள் கழித்து சந்தித்தார். அது பற்றிய அவர் அனுபவத்தைக் கேட்டாயா? உன் தாத்தாவும் பாட்டியும் ஊர்த் திருவிழாவுக்கு சென்று வந்தார்கள். அங்குள்ள விஷயங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தவித்தார்கள். அப்போது நீ அந்தக் கதைகளை எல்லாம் கேட்டாயா?’’
‘‘இல்லை.’’
‘‘இப்படி நீ அடுத்தவர்களின் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுக்காமல் அலட்சியப்படுத்தும்போது, அடுத்தவர் வெற்றியை பாராட்டாமல் இருக்கும் போது, அவர்கள் மட்டும் எப்படி உன் வெற்றியைக் கொண்டாடுவார்கள்?’’
‘‘புரிகிறது அம்மா’’ 

boy

‘‘வா! நீ உன் வெற்றிச் செய்தியை சொல்லும் போது வேண்டுமென்றே உன்னைக் கண்டு கொள்ள கூடாது என்று நாங்கள் அனைவரும் திட்டமிட்டே இந்த நாடகத்தை நடத்தினோம். அப்போது தான் உனக்கு பிறர் உணர்வு புரியும் என்று இப்படி நடித்தோம்’’ என்று அம்மா சொல்ல, அவன் மனம் நிம்மதியானது.
கண்களைத் துடைத்துக் கொண்டு சாப்பிட வந்தான். அப்பா, தாத்தா, பாட்டி, அம்மா என்று அனைவரும் அவன் எப்படி வென்றான் என்பதை ஒவ்வொன்றாகக் கேட்டு ரசிக்க ஆரம்பித்தார்கள். பதிலுக்கு அவன், அவர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ள ஆரம்பித்தான். நமக்குப் பிடித்தவர்களின் அனுபவங்களைக் கேட்கும் படியான காதுகளைக் கொண்டால், அவர்கள் வெற்றியை வாழ்த்துகிற மனதைக் கொண்டால், அவர்களும் நாம் சொல்வதைக் கேட்பார்கள், நம்மை வாழ்த்துவார்கள்.