பாராசூட் பிராண்ட் நிறுவனமான மரிகோவின் லாபம் 50 சதவீதம் வீழ்ச்சி….

 

பாராசூட் பிராண்ட்  நிறுவனமான மரிகோவின் லாபம் 50 சதவீதம் வீழ்ச்சி….

பிரபல பாராசூட் பிராண்ட் நிறுவனமான மரிகோ கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.194 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 51 சதவீதம் குறைவாகும்.

நாட்டின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது மரிகோ. பாராசூட், நிகார் உள்ளிட்ட பிராண்ட் தயாரிப்புகள் மரிகோ நிறுவனத்தின் உடையதுதான்.. மரிகோ நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.194 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 51.12 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் மரிகோ நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.399 கோடி ஈட்டியிருந்தது.

பாராசூட் தேங்காய் எண்ணெய்

2020 மார்ச் காலாண்டில் மரிகோ நிறுவனத்தின் மொத்த வருவாய் 7 சதவீதம் குறைந்து ரூ.1,496 கோடியாக சரிவடைந்தது. இதில் லாக்டவுன் காரணமாக இந்நிறுவனத்தின் உள்நாட்டு வர்த்தகம் வாயிலான வருவாய் 4 சதவீதம் சரிந்து ரூ.1,146 கோடியாக குறைந்தது. இதேகாலாண்டில் அளவு அடிப்படையில் இந்நிறுவனத்தின் இந்திய விற்பனை 3 சதவீதம் குறைந்துள்ளது.

பணம்

கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.1,265 கோடியாக குறைந்தது. 2019 மார்ச் காலாண்டில் மரிகோ நிறுவனம் ரூ.1,366 கோடியை மொத்த செலவினமாக மேற்கொண்டு இருந்தது. ஆக, கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த செலவினம் 7.39 சதவீதம் குறைந்து இருந்தது.