பாரம்பரிய அவல் பாயசம் செய்வது எப்படி…

 

பாரம்பரிய அவல் பாயசம் செய்வது எப்படி…

நம் பாரம்பரிய உணவில் நாம் மறந்த இன்றியமையாத உணவு அவல். தவிர்க்கக் கூடாததும் கூட . ஆரோக்கியத்தை மேம்படுத்தி , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பசியையும் போக்க வல்ல அவலில் இனிப்பான பாயாசம் அருமையான காலை உணவாகும். மாலை நேர சிற்றுண்டிக்கு பதில் பள்ளி விட்டு வரும் மழலைகளுக்குத் தர ஆரோக்கியமான , சுவையான அவல் பாயாசம் எளிதில் செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்

அவல் -250கிராம்
பால்-500மிலி
சர்க்கரை அல்லது வெல்லம்-250கிராம்
தேங்காய்-1/2மூடி
முந்திரி பருப்பு-10
உலர் திராட்சை-10
ஏலக்காய் பொடி- சிறிதளவு
பச்சைக் கற்பூரம்-சிறிதளவு
நெய்-50கிராம்உலர் பழங்கள்

செய்முறை

தேங்காயை அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் திராட்சை , முந்திரி பருப்பை நெய்யில் சிவக்க வறுக்கவும். பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பால் கொதித்து வந்ததும் அதில் அவல் சேர்க்க வேண்டும். கிளறி விட்டு அவல் வெந்தவுடன்  சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவேண்டும். கரைந்தவுடன் முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ஏலம், பச்சை கற்பூரம் சேர்த்து கொதிக்க விடவேண்டும். பின் தேங்காய்ப் பால் சேர்த்து  பொங்கியவுடன்  இறக்க வேண்டும். சூடான , சுவையான அவல் பாயாசம் நிமிடத்தில்  தயார்.
குழந்தைகளுக்கு சுறுசுறுப்பையும்,ஆரோக்கியத்தையும் தரும் இந்த அவல் பாயாசத்தை அடிக்கடி உணவில் சேர்த்து நலம் பெறலாம்.சிவப்பு அவல், வெல்லம் சேர்த்து  பாயாசம் செய்ய சத்தும் சுவையும் அதிகரிக்கும்.