பாரத தாயாக உருவெடுத்த நிர்மலா சீதாராமன்! நெட்டிசன்களை கடுப்பாக்கும் பட்ஜெட் ப்ரமோ!!

 

பாரத தாயாக உருவெடுத்த நிர்மலா சீதாராமன்! நெட்டிசன்களை கடுப்பாக்கும் பட்ஜெட் ப்ரமோ!!

வரும் ஜூலை 5ஆம் தேதி 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜூலை 26ஆம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 

வரும் ஜூலை 5ஆம் தேதி 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜூலை 26ஆம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 

பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். வரும் ஜூலை 5ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் சாமானியர்களிடமும் பல துறைகளைச் சேர்ந்தவர்களிடமும் அதிகமாக உள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை ஜூலை 4ஆம் தேதி (நாளை) சமர்ப்பிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே. வி. சுப்ரமணியன் இதனைத் தாக்கல் செய்கிறார். 

 

बजट कुछ नए अन्दाज़ में ⁦@ZeeNews⁩ पर। पूरा समझना है तो यहाँ आईये। pic.twitter.com/TfK5rH2dkM

— Sudhir Chaudhary (@sudhirchaudhary) July 3, 2019

இந்நிலையில் ஜெய் மா லெஷ்மி என்ற பெயரில் பிரமோ ஒன்றை சீ நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் பாரத தாயாக நிர்மலா சீதாராமன் சித்தரிக்கப்பட்டுள்ளார். பாரத தாயின் கையிலிருந்து பட்ஜெட் மலர்வது போன்றவும், பாரத தாயின் கையில் ரயில்வே, பாதுகாப்பு, கல்வி, விவசாயம் போன்ற அனைத்து துறைகளின் பட்ஜெட்டும் வெளிவருவது போலவும் அதனை அடுத்து நிர்மலா சீதாராமன் தோன்றுவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.