பாரத் பெட்ரோலியம் உட்பட 5 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசு!

 

பாரத் பெட்ரோலியம் உட்பட 5 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசு!

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 53.29 %பங்கையும், அந்த நிர்வாகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியம் உட்பட 5 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று டெல்லியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

bharath

அந்த கூட்டத்தில் இந்தியாவின் 2வது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

nirmala

 அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 53.29 %பங்கையும், அந்த நிர்வாகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கண்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 30.8% பங்கையும் ,  THDC எனும் நீர்மின் உற்பத்தி நிறுவனத்தின் 74.23% பங்கையும், வடகிழக்கு மின் உற்பத்தி கார்பரேஷன் நிறுவனமான நிப்கோவின் 100% பங்கையும் தனியாருக்கு விற்கப்படவுள்ளது. அதே போல, இந்தியக் கப்பல் கார்பரேஷன் நிர்வாகத்தின் 63.75% பங்கையும் அதன் நிர்வாகத்தையும் தனியாருக்கு ஒப்படைக்கவுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

modi

நாட்டின் பொருளாதார சரிவை ஈடுகட்ட புதிய வழிகளை மேற்கொள்ளாமல் நாட்டில் இருக்கும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் மத்திய அரசு தனியார் மயமாக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.பாரத் பெட்ரோலியம் உட்பட அனைத்து பொதுத் துறை நிறுவங்களில்  பணிபுரியும் ஊழியர்களின் நிலை தற்போது கேள்விக் குறையாகியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு பா.ஜ.கவின் எதிர்க்கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.