பாரத் பந்த் #Bharatbandh -11 தலைவர்கள் ஆதரவு

 

பாரத் பந்த் #Bharatbandh -11 தலைவர்கள் ஆதரவு

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லில் கடந்த 11 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றும் அந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால், AIKSCC எனும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வரும் 8ம் தேதி நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

பாரத் பந்த் #Bharatbandh -11 தலைவர்கள் ஆதரவு

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக அறிவித்துள்ள டிச.8ம் தேதி பாரத் பந்தினை வெற்றி பெறச் செய்ய தமிழக மக்கள், விவசாயிகள், தொழிற்சங்கங்கள் அனைவருக்கும் அனைத்துக் கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்!

பாரத் பந்த் #Bharatbandh -11 தலைவர்கள் ஆதரவு

தமிழகத்தின் எழுச்சிக் குரல், விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற துணை நிற்கட்டும்! என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும், தமிழகத்தில் இருந்து எழும் ஆதரவுக்குரல்கள் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற துணை நிற்கும் குரலாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாரத் பந்த் #Bharatbandh -11 தலைவர்கள் ஆதரவு

இது தவிர, மக்கள் நீதிமய்யம் கமல்ஹாசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

பாரத் பந்தினை முன்னிட்டு பாரத் பந்த்( #BharatBandh ) என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகிறார்கள். ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் அந்த ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் ஷேர் செய்து வருகிறார்கள்.

ஆதரவு அதிகம் இருப்பதால் நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கப்போகிறது இந்த பாரத் பந்த்.