பாரதிராஜாவின் ‘மீண்டும் ஒரு மரியாதை’…ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

பாரதிராஜாவின் ‘மீண்டும் ஒரு மரியாதை’…ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 எளியவர்களுக்கு சினிமா கதவுகளை திறந்துவிட்ட படைப்பாளி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் ஆரம்பித்த படம், ஓம்.  

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என இவர் இயக்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு பல முன்னணி நடிகர்களுடன் வலம்வந்தவர்  பாரதிராஜா. நடிகர் நடிகைகள் இப்படி தான் இருக்க தான் வேண்டும் என்ற கோட்பாட்டை உடைத்தெறிந்து  எளியவர்களுக்கு சினிமா கதவுகளை திறந்துவிட்ட படைப்பாளி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் ஆரம்பித்த படம், ஓம்.  

ttn

இப்படத்தை அவரிடம்  உதவி இயக்குநராக இருந்த நிர்மல்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்  அவருக்கு சலீம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இதிலிருந்து விலகினார்.  எனவே இப்படத்தை பாரதிராஜாவே மனோஜ் கிரியேஷன்ஸ் மூலம் இயக்கி தயாரிக்கிறார். இதில் நடிகை மவுனிகா, நடிகர் ஜோ மல்லூரி, நடிகை ராசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

ஐரோப்பியாவில் வாழும் இலங்கை தமிழர்களை மையமாக வைத்து  உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனதால் படத்தின் தலைப்பை ‘மீண்டும் ஒரு மரியாதை’ என பாரதிராஜா மாறினார். இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக பாரதிராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.