பாய் பிரன்ட் கிடைத்துவிட்டார்: புகைப்படத்தை வெளியிட்ட vj ரம்யா 

 

பாய் பிரன்ட் கிடைத்துவிட்டார்: புகைப்படத்தை வெளியிட்ட vj ரம்யா 

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர்  vj ரம்யா.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர்  vj ரம்யா. அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைந்த இவர் ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை போன்ற படங்களில் நடித்துள்ளார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டனர். பிறகு படங்களில் மட்டும் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் இன்று தனது 33வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

அதையொட்டி அவரது நண்பர்கள் பலரும் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகளை அவருக்கு அனுப்பியுள்ளனர். அந்த வகையில் ஜிம் ட்ரைலர் கொடுத்த பிறந்தநாள் பரிசு புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் எலும்புக் கூடு தான். அதில் அவர் கூறியதாவது, ‘எனக்கு பொருத்தமான பாய் பிரண்ட் கிடைத்துவிட்டார்’ என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.