“பாய் கடை பொருளில் கொரானா குடியிருக்கு ” ஊடகத்தில் உலா வரும்- சிறுபான்மையினர் மீது போலியான அவதூறு கடிதம்… 

“பாய் கடை பொருளில் கொரானா குடியிருக்கு ” ஊடகத்தில் உலா வரும்- சிறுபான்மையினர் மீது போலியான அவதூறு கடிதம்… 

அகமதாபாத் காவல்துறையின் ரகசிய கடிதத்தை மார்பிங் செய்து, தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் பற்றி சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பியதாக சைபர் கிரைம் செல் ஒருவரை கைது செய்துள்ளது.

அகமதாபாத் காவல்துறையின் ரகசிய கடிதத்தை மார்பிங் செய்து, தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் பற்றி சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பியதாக சைபர் கிரைம் செல் ஒருவரை கைது செய்துள்ளது.

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தின் மஞ்சல்பூர் பகுதியில் பிரணவ் சமூகத்தில் வசிக்கும் 53 வயதான ராஜேஷ் சாரங், ஏப்ரல் 1 ம் தேதி அகமதாபாத் காவல்துறையிலிருந்து  ஒரு கடிதம் வந்ததாக சமூக ஊடகங்களில் ஒரு கடிதத்தை பரப்பினார்.

tabliqui-jamaat

அந்த போலி கடிதத்தில், “டெல்லியில் நடந்த நிஜாமுதீன் மார்க்காஸ் நிகழ்ச்சியில்  2,500 தப்லிகி ஜமாஅத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர், அவர்களுக்கு கொரோனா வைரஸ்  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த நோயை பரப்ப  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். இதனால் அனைத்து இந்து சகோதரர்களும் அந்தந்த பகுதிகளிலுள்ள முஸ்லீம் கடைகளில்  பழம் அல்லது காய்கறி வாங்கினால்  அவர்களுக்கும்  கொரானா பரவும்” என்று கூறப்பட்டுள்ளது. 

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக அகமதாபாத் காவல்துறை இந்த அவதூறுகடிதத்தினை பரப்புவதைப் போல ராஜேஷ் கடிதத்தைத் திருத்தியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலி கடிதம் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதை அடுத்து, அகமதாபாத் நகர போலீஸ், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதியளித்தது.