பாம்பு கடி.. உயிரைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி? உடனே செயல்படுங்க!

 

பாம்பு கடி.. உயிரைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி? உடனே செயல்படுங்க!

தமிழகம் முழுக்கவே நெடுஞ்சாலைகளில் இரு புறமும் இருந்த மரங்களை எல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டோம். பொட்டல் காடுகளாய் இருந்த இடங்களை கூட தமிழகம் முழுக்கவே பாரபட்சமில்லாமல் ப்ளாட் போட்டு கன ஜோராய் காசு பார்க்கவும் ஆரம்பிச்சாச்சு… அந்த இடங்களில் வசித்து வந்த ஜந்துக்கள் எல்லாம் இருக்க இடம் தெரியாமல் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டன.

தமிழகம் முழுக்கவே நெடுஞ்சாலைகளில் இரு புறமும் இருந்த மரங்களை எல்லாம் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டோம். பொட்டல் காடுகளாய் இருந்த இடங்களை கூட தமிழகம் முழுக்கவே பாரபட்சமில்லாமல் ப்ளாட் போட்டு கன ஜோராய் காசு பார்க்கவும் ஆரம்பிச்சாச்சு… அந்த இடங்களில் வசித்து வந்த ஜந்துக்கள் எல்லாம் இருக்க இடம் தெரியாமல் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டன.  சமீப காலங்களாய் இப்படி விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாப்பட்டி சுற்றுவட்டாரங்களில் பாம்புக் கடித்து இறந்து போவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களில் பாம்பு கடித்து சுமார் 25 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சை பலனின்றி சுமார் 8 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

snake bite

கிராமங்களிலுள்ள வீடுகளைச் சுற்றிலும் அடர்ந்து காணப்படும் கருவேல மரங்களையே இதற்கு பிரதான காரணமாக சொல்கிறார்கள். குளிர் ரத்தப் பிராணிகளான பாம்புகள், தாங்கள் வசிப்பதற்கு தனியாக குழிகள் தோண்டுவது கிடையாது. மாறாக எலிப் பொந்துகளுக்குள் சென்று தஞ்சமடைந்து விடும். மழைக்காலங்களில் அந்தப் பொந்துகளில் தண்ணீர் நிரம்பி விடுவதால் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாம்புகள் படையெடுக்கின்றன.  குறிப்பாக வீட்டைச் சுற்றிலும் அல்லது வீட்டுக்குள் இருக்கும் அடைசலான, பெரிய அளவில் புழக்கம் இல்லாத பகுதிகளில் இவை ஒளிந்து கொள்ளும். 
பாம்பு கடித்தவுடன் கண்டிப்பாக பதற்றமடையக் கூடாது. அப்படி பதற்றமடைவதே விஷம் உடலுக்குள் வேகமாகப் பரவி விடுவதற்கான முக்கிய காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.  எந்த விதமான பதற்றமும், பயமும் இல்லாமல், நேரத்தையும் விரயமாக்காமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் என்கிறார்கள். 
தவிர, அவசர கால முதலுதவி என்கிற பெயரில் முறையான போதிய பயிற்சி இல்லாமல் பச்சையிலை வைத்துக் கட்டுவது, சிறுநீர் குடிப்பது உள்ளிட்ட செயல்களில் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. இப்படியெல்லாம் செய்வதால் சிகிச்சையளிப்பதில் காலதாமதம் தான் ஏற்படுமே தவிர சிகிச்சைக்கு கொஞ்சமும் இவை உதவிகளை செய்யாது என்றும் எச்சரிக்கின்றனர்.  வீட்டைச்சுற்றி தேவையற்ற பொருட்களை போட்டு அடைத்து வைக்காமல் சுத்தமாக வைத்து கொள்வதோடு, முட்புதர்களை வளரவிடாமல் அவ்வப்போது வெட்டி சீர் செய்து வந்தால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.