பாம்பு கடித்து உயிரிழந்த கேரள சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய ராகுல்!

பாம்பு கடித்து உயிரிழந்த கேரள சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய ராகுல்!

கேரள மாநிலம் வயநாட்டில் பள்ளிக்கூடத்தில் பாம்பு கடித்ததில் உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்று ஆறுதல் கூறினார்.

கேரள மாநிலம் வயநாட்டில் பள்ளிக்கூடத்தில் பாம்பு கடித்ததில் உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்று ஆறுதல் கூறினார்.

rahul

வயநாடு அருகே சுல்தான் பத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவரது மகள் ஷகாலா சுல்தான் பத்தேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் பள்ளியில் சிறுமி ஷகாலா மயங்கிய நிலையிலிருந்துள்ளார். உடனே ஆசிரியர் ஷகாலாவுக்கு என்ன ஆனது என்று பார்த்தார். அப்போது, அவரது காலில் ரத்தம் வருவதும், அருகில் சிறிய துவாரத்திலிருந்த பாம்பு ஷகாலாவை கடித்திருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஷகாலா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

girl

இதைத் தொடர்ந்து கேரளாவில் மற்றொரு மாணவனையும் பாம்பு கடித்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவன் உயிர் பிழைத்தான். இதனால், கேரளாவில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் பாம்பு வேட்டை நடந்தது. இதில், பல பள்ளிகளில் பாம்பு பிடிபட்டது.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு மாநில அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று வயநாடு எம்.பி-யான ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், வயநாடு சென்ற அவர், உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்கு திடீரென்ற சென்றார். அங்கு சிறுமியின் பெற்றோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.