பாம்பு இனத்திற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் பெயர்… வாயடைத்து நிற்கும் எதிர்கட்சிகள்!

 

பாம்பு இனத்திற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் பெயர்… வாயடைத்து நிற்கும் எதிர்கட்சிகள்!

சிவசேனா கட்சியின் தொண்டர்களிடையே உற்சாகமாக வலம் வருகிறது இந்த செய்தி. புதிதாய் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் ஒரு பாம்பு இனத்திற்கு தங்கள் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் பெயரை சூட்டியிருக்கிறார்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர்.  சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதித்யா தாக்கரே, தேஜஸ் தாக்கரே என்று இரு மகன்கள் இருக்கின்றனர்.

சிவசேனா கட்சியின் தொண்டர்களிடையே உற்சாகமாக வலம் வருகிறது இந்த செய்தி. புதிதாய் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் ஒரு பாம்பு இனத்திற்கு தங்கள் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் பெயரை சூட்டியிருக்கிறார்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர்.  சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதித்யா தாக்கரே, தேஜஸ் தாக்கரே என்று இரு மகன்கள் இருக்கின்றனர். இதில்  மூத்த  மகன் ஆதித்யா தாக்கரே சிவசேனா கட்சியின் இளைஞரணி தலைவராக தற்போது இருக்கிறார். இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வசித்து வரும் பூனை பாம்பு என்ற அரிய வகை பாம்பு இனத்திற்கு, இரண்டாவது மகன் தேஜஸ் தாக்கரேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

aditiya

சிவசேனா தலைவரின் இரண்டாவது மகன் தேஜஸ் தாக்கரே காடுகளின் பயணம் செய்வதில் அலாதியான விருப்பம் உள்ளவர். இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு மஹாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அவர் பயணிக்கும் போது புதுவகையான பூனை பாம்புகள் இருப்பதை கண்டறிந்துள்ளார். இதுவரையில் இந்த பாம்பு இனம் கண்டுபிடிக்கப்படவில்லை. 
இந்த பாம்புகள் மரத்தவளையையும், அதன் முட்டைகளையும் உணவாக உட்கொள்ளும். விஷமில்லாத பாம்பு வகையைச் சார்ந்தது. உடனடியாக இந்த பாம்பு இனங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தில் அவர் தாக்கல் செய்திருந்தார். அவரது ஆய்வறிக்கையை அடுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆய்வு நடத்தி பூனை பாம்பு இனங்கள் இருப்பதை உறுதி செய்தனர்.  இந்த பாம்பின் மேல் பகுதியில் புலி போன்ற வரிகள் இருக்கும். இந்த பாம்பு இனத்துக்கு ‘‘தாக்கரேஸ் பூனை பாம்பு” என தற்போது பெயரிட்டு உள்ளனர். அதாவது தேஜஸ் தாக்கரே இந்த பாம்பினத்தை கண்டுபிடித்ததற்காக அவரது பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பாம்பின் அறிவியல் பெயர் ‘போய்கா தாக்கரேயி’ ஆகும். இரவு நேரத்தில் மட்டுமே தனது இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்து இரை தேடக்கூடியது இந்த பாம்பு.