பாம்பும் நோகக்கூடாது, தடியும் உடையக் கூடாது: ரஜினிகாந்த் மீது திருமாவளவன் விமர்சனம்

 

பாம்பும் நோகக்கூடாது, தடியும் உடையக் கூடாது: ரஜினிகாந்த் மீது திருமாவளவன் விமர்சனம்

சபரிமலை விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்

சென்னை: சபரிமலை விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், அங்கு பெண்களை அனுமதிக்க மறுத்து தெரிவித்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து கருத்து கூறிய நடிகர் ரஜினிகாந்த், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சம்பிரதாயம் ஐதீகம் இருக்கும். அதில் யாரும் தலையிட கூடாது என்பது என் கருத்து. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்றக் கூடாது என்றார். அதேசமயம், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தான் வரவேற்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சபரிமலை விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பாம்பும் நோகக்கூடாது, தடியும் உடையக் கூடாது என்ற ரீதியில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.