பாம்புக்கு தனி வீடு! பூர்வீக வீட்டை தானமளித்த அதிசய குடும்பம்!

 

பாம்புக்கு தனி வீடு! பூர்வீக வீட்டை தானமளித்த அதிசய குடும்பம்!

தமிழகத்தில் ஒரு புறம் நூறு,  இருநூறு ரூபாய் பணத்திற்காக கொலைகள் நடந்து வருகிற நிலையில், வசித்து வரும் பூர்வீக வீட்டையே பாம்புக்கு கொடுத்து விட்டு வேறு இடத்தில் இடம்பெயர்ந்து வசித்து வருகிறது ஓர் அதிசய குடும்பம். தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடராஜன்.

தமிழகத்தில் ஒரு புறம் நூறு,  இருநூறு ரூபாய் பணத்திற்காக கொலைகள் நடந்து வருகிற நிலையில், வசித்து வரும் பூர்வீக வீட்டையே பாம்புக்கு கொடுத்து விட்டு வேறு இடத்தில் இடம்பெயர்ந்து வசித்து வருகிறது ஓர் அதிசய குடும்பம். தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடராஜன். மூன்றாம் தலைமுறையினரான இவரது குடும்பம் இப்போதும் அவர்களது பூர்வீக வீட்டை பாம்பு வசிப்பதற்கு கொடுத்திருக்கிறார்கள். உடன் பிறந்தவர்களே சொத்துக்காக நீதிமன்றத்தின் படிகளில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் இவர்கள் குடும்பமே வழிவழியாக இப்படி பாம்பு புற்றைத் தொந்தரவு செய்யாமல் வேறு இடத்தில் வசித்து வருவதை அந்த பகுதியினர் ஆச்சர்யமாகச் சொல்கின்றனர்.

 

snake

வெங்கடராஜன், அவரது சகோதரி வசந்தியின் பூர்வீக வீட்டில் தான் கடந்த 21 ஆண்டுகளாக பாம்பு புற்றாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உள்ளது. 21 வருஷங்களுக்கு முன்பு வெங்கடராஜனின் தாத்தா ஷேசைய்யர் குடிசை கட்டி வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அதன் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். வாடகைக்கு இருந்தவர்கள், வீட்டில் நல்ல பாம்பு இருப்பதைப் பார்த்து, அதை அடித்துக் கொன்று விட்டனர்.  பின் சில நாட்களில் புற்று மீண்டும் பெரியதாக வளர்ந்து உள்ளது. அந்த புற்றை தேடி பாம்பும் அவ்வப்போது வந்துள்ளது. இதையடுத்து, பாம்பு வசிக்கும் இடத்தில் தான் நாம் வீடு கட்டியிருக்கிறோம் என்று சொன்ன ஷேசைய்யர், அந்த வீட்டை அப்படியே பாம்பு புற்றுக்கு விட்டு விட்டு, அருகே வேறு இடத்தில் குடிசை கட்டி வசிக்கத் துவங்கினார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகள் விஜயகுமாரியும் அப்படியே வாழ்ந்து வந்துள்ளார். தற்போது விஜயகுமாரியின் பிள்ளைகளான வெங்கடராஜனும், வசந்தியும் அதைத் தொந்தரவு செய்யாமல் அப்படியே பாம்பு புற்றுக்கு விட்டு விட்டனர். அந்த பகுதி பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்று பாம்பு புற்றுக்கு இன்று வரையில் பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.