பாம்பனுக்கு பதிலாக புதிய பாலம்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

 

பாம்பனுக்கு பதிலாக புதிய பாலம்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

பாம்பன் பாலத்துக்கு பதிலாக ரூ.250 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்துக்கு பதிலாக ரூ.250 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராமேஸ்வரத்தில் கடலுக்கு நடுவே பாம்பன் ரயில்வே பாலம் உள்ளது. உலக புகழ்பெற்ற இந்த பாலம் கடந்த 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. 104 ஆண்டுகள் ஆகியும் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த பாலம் கடந்த 2006-ம் ஆண்டு அகலப்பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் தற்போது பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ரயில்கள் அனைத்தும் மண்டபத்தோடு நிறுத்தப்பட்டு விடுகிறது. இந்த பாலத்தில், சென்னையில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரயில் பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.. பழைய பாலம் 104 ஆண்டுகள் பழைமையாக இருப்பதாலும், பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.. ரூ.250 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகிறத எனவும் இதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. பாலத்தை கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.