பாப் பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸின் 20 ஆண்டுகால இசை பயணம்!

 

பாப் பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸின் 20 ஆண்டுகால இசை பயணம்!

பிரபல பாப் பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸின் முதல் சிங்கிள் பாடல் ’பேபி ஒன் மோர் டைம்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

பிரபல பாப் பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸின் முதல் சிங்கிள் பாடல் ’பேபி ஒன் மோர் டைம்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

90-களின் இறுதியில் அமெரிக்க பாப் உலகை அசரடித்தவர் ப்ரிட்னி ஸ்பியர்ஸ். குறைந்த வயதில் பல மில்லியன் டாலர்களை சம்பாதித்த ப்ரிட்னியின் வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் போனது.

கடந்த 1998ம் ஆண்டு ரிலீசான ’பேபி ஒன் மோர் டைம்’ பாடல் அதிகம் விற்கபட்ட பாடல்களில் ஒன்றாகும். இந்த பாடல் உருவான விதம் பற்றிய வீடியோவை ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக தனக்கும், தனது பாடல்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன் எனது பாடலை இந்த உலகம் கேட்டது. அது முதல் இன்று வரையிலான அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. முதல் நாள் முதலே எனது பாடல்களை ரசித்த ரசிகர்களுக்கு நன்றி. இத்தனை ஆண்டுகளாக கிடைத்த உங்களது அன்பு தான் என் உலகம்’ என்று ட்வீட்டியுள்ளார்.