பாப்-அப் கேமரா, இன்டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் அம்சங்களுடன் தயாராகும் ஓப்போ R19, விவோ X25 ஸ்மார்ட்போன்கள்!

 

பாப்-அப் கேமரா, இன்டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் அம்சங்களுடன் தயாராகும் ஓப்போ R19, விவோ X25 ஸ்மார்ட்போன்கள்!

ஓப்போ R19, விவோ X25 ஆகிய ஸ்மார்ட்போன்கள் பாப்-அப் கேமரா, இன்டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் அம்சங்களுடன் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெய்ஜிங்: ஓப்போ R19, விவோ X25 ஆகிய ஸ்மார்ட்போன்கள் பாப்-அப் கேமரா, இன்டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் அம்சங்களுடன் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு வெளியாக உள்ள ஓப்போ R19, விவோ X25 ஆகிய ஸ்மார்ட்போன்கள் பாப்-அப் கேமரா, இன்டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் அம்சங்களுடன் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்பிளே இதில் இடம்பெற்றிருக்கும். பாப்அப் கேமரா என்பது தனியாக ஒரு ஸ்லைடரில் கேமரா இருக்கும். இதனால் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் கேமராவுக்கென்று தனியாக இடம் தேவைப்படாது.

அதேபோல விரல்ரேகை சென்சாரும் இன்-டிஸ்பிளே வகையில் அமைக்கப்படும்போது நாட்ச் டிஸ்பிளே போல அல்லாமல் உண்மையான ஃபுல் வியூ டிஸ்பிளே ஸ்மார்ட்போனில் இடம்பெறுவது சாத்தியமாகிறது. இந்த தொழில்நுட்பங்கள் தவிர பன்ச் ஹோல் கேமரா, வாட்டர் டிராப் நாட்ச் ஆகியவையும் புதிதாக தயாராகி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு ஓப்போ ஃபைன்ட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஸ்லைட் அவுட் கேமரா இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த மாடல் நீண்ட காலம் தாக்குப்பிடிக்காது என்று விமர்சனம் எழுந்தது. மேலும் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் ஸ்டர்டியர் கேமரா தொழில்நுட்பம் இடம்பெற்றது. ஓப்போ R19 ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்று உறுதியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. மார்ச் மாதவாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.