“பாப்பா ஸ்வீட் தர்றேன் உள்ள வா”-ஸ்வீட் கடைக்குள் சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை 

 

“பாப்பா ஸ்வீட் தர்றேன் உள்ள வா”-ஸ்வீட் கடைக்குள் சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை 

அந்த கடைக்கு திங்கள்கிழமை பிற்பகல், ஒரு 9 வயது சிறுமி சமோசாக்கள் வாங்க சென்றார். அப்போது சிறுமியை கடைக்குள் வருமாறு சிங் கூறி, குளிர்சாதன பெட்டியின் அருகே அழைத்துச் சென்று தகாத முறையில் தொட்டுள்ளார்.

குஜராத்தின் வதோதராவில் 9 வயது சிறுமியை ஒரு இனிப்பு கடை உரிமையாளர் திங்கள்கிழமை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

குஜராத்தின் வதோதராவில் சிவ்ராம் சிங் ஃபாஜ்தார் என்ற நபர் மகர்புராவில்  பவானி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் கடை வைத்துள்ளார்.
அந்த கடைக்கு திங்கள்கிழமை பிற்பகல், ஒரு 9 வயது சிறுமி சமோசாக்கள் வாங்க சென்றார். அப்போது சிறுமியை கடைக்குள் வருமாறு சிங் கூறி, குளிர்சாதன பெட்டியின் அருகே அழைத்துச் சென்று தகாத முறையில் தொட்டுள்ளார். அதனால் பயந்து சிறுமி அழத் தொடங்கியபோது, அவர் சிறுமியிடம் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். 

9 year

அதற்கு பிறகு அந்த பெண் வீட்டிற்கு வந்ததும் தனக்கு  நடந்த பாலியல் விவகாரத்தை பெற்றோரிடம் விவரித்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்த  சிறுமியின் தந்தை அவரோடு கடைக்கு சென்று சண்டை போட்டுள்ளார். பிறகு போலீசில் அந்த மிட்டாய் கடைக்காரர் மீது  புகார் தெரிவித்ததும், போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.