பாபாவில் ரஜினியின் வாழ்வை மாற்றிய மார்ச் 12! 

 

பாபாவில் ரஜினியின் வாழ்வை மாற்றிய மார்ச் 12! 

சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தான் முதல்வராக வர யோசித்தது இல்லை. படித்த, திறமை வாய்ந்த இளைஞரை முதல்வராக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எழுச்சி இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க முடியும். இல்லை என்றால் தொடங்கி பயனில்லை

சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தான் முதல்வராக வர யோசித்தது இல்லை. படித்த, திறமை வாய்ந்த இளைஞரை முதல்வராக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எழுச்சி இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க முடியும். இல்லை என்றால் தொடங்கி பயனில்லை. 1996 ல் இருந்து நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிதான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். அதற்கு முன்பு அரசியலுக்கு வருவீர்களாக என்று கேட்டால் ஆண்டவன் கையில் உள்ளது என்றுதான் சொன்னேன்” எனக்கூறினார். 

 

rajinikanth
கடந்த சில நாட்கள் முன்பு மாவட்டச் செயலாளர்களை சந்தித்த ரஜினி, ‘தனிபட்ட வகையில் ஒரு ஏமாற்றம்’ எனக் கூறியிருந்தார். அதனையொட்டி என்ன ஏமாற்றம் எனச் செய்தியாளர்கள் கேட்க முயன்ற போது அவர் ‘நேரம் வரும்போது சொல்கிறேன்’ என்றார். ஆக, அவர் ஏன் நேரம் வரும்போது எனக் கூறவேண்டும். அந்தளவுக்கு என்ன உண்மை அதில் ஒளிந்துள்ளது என பல விவாதங்கள் நடந்தன. அவர் சொன்ன நேரம் மார்ச் 12. அதாவது இன்றுதான்.

மார்ச் 12

இந்தத் தேதிக்கும் ரஜினியின் ‘பாபா’ படத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. இந்தப் படத்தில் ’மார்ச் 12’ ஆம் தேதியை வைத்துதான் ஒரு கதை திருப்பம் ஏற்படும். 12 ஆம் தேதிக்கு பின்னர் தான் சாதாரண மனிதனாக இருக்கும் ரஜினிக்கு ஒரு அமானுஷ்ய சக்தி கிடைக்கும். அதையொட்டியே தன் நிஜ அரசியல் வாழ்வுக்கும் ரஜினி இந்தத் தேதியை தேர்ந்தெடுத்துள்ளார்.