பாபர் மசூதியை ஏற்றுக் கொள்கிறோம்.. மசூதியின் அடித்தளத்தில் இஸ்லாம் முறைப்படி இல்லை!

பாபர் மசூதியை ஏற்றுக் கொள்கிறோம்.. மசூதியின் அடித்தளத்தில் இஸ்லாம் முறைப்படி இல்லை!

அயோத்தி வழக்கில் தீர்ப்பை நீதிபதிகள் படிக்கத் துவங்கினார்கள். தீர்ப்பு முழுவதையும் படித்து முடிக்க அரை மணி நேரமாகும். தீர்ப்பின் முக்கிய அம்சமாக பாபர் மசூதி பாபர் காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.

babar

மேலும் அமைதியைக் காக்கும் வகையிலும் பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். சர்ச்சைக்குரிய இடத்தில் 1949-ல் ராமர் சிலை வைக்கப்பட்டது என்றும், காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. பாபர் மசூதியின் அடித்தளத்தில் இஸ்லாம் முறைப்படி இல்லை என்றும், சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது என்றும், அயோத்தி தங்கள் இடம் என இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களும் பாபர் மசூதியை நம்புகின்றனர் என்றும் தெரிவித்தது. 

ayodhyya

மேலும், ராமர் அயோத்தியில் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் நம்புவதை மறுக்க இயலாது என்றும், அதே இடத்தை பாபர் மசூதி என இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள் என்றும் தலைமை நீதிபதி கூறினார். அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; எதையும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்துவிட முடியாது என்றார். அயோத்தியில் தொழுகை நடத்துவதற்கான உரிமையை இஸ்லாமியர்கள் முழுமையாக இழக்கவில்லை என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.