பாபர் மசூதியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது! தொழுகைக்கு மசூதி அவசியமில்லை!

 

பாபர் மசூதியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது! தொழுகைக்கு மசூதி அவசியமில்லை!

இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்த்திருக்கும் அயோத்தி வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்குகிறது. இந்நிலையில் 5 நீதிபதிகளுமே ஒருமித்த தீர்ப்பினை வழங்குவார்கள் என்று தலைமை நீதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஷியா, வக்பு வாரிய அமைப்புகளும், நிர்மோகி அகாரா அமைப்பும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்த்திருக்கும் அயோத்தி வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்குகிறது. இந்நிலையில் 5 நீதிபதிகளுமே ஒருமித்த தீர்ப்பினை வழங்குவார்கள் என்று தலைமை நீதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஷியா, வக்பு வாரிய அமைப்புகளும், நிர்மோகி அகாரா அமைப்பும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்று கொள்வதாக அறிவித்தனர். மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும். ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மற்றோரு பிரிவினர் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

barbar

மேலும், சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது. அயோத்தி தங்கள் இடம் என இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களும் பாபர் மசூதியை நம்புகின்றனர் ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய இடம் அரசுக்கு சொந்தமானது என்று தெரிவித்தனர். இஸ்லாமியர்கள் தங்களது தொழுகைகளை கட்டாயம் மசூதியில் தான் நடத்த வேண்டும் என்பதில்லை. தொழுகை நடத்த மசூதி அவசியல் இல்லை என இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.