பான் எண்ணை ஆதாருடன் இன்னும் 25 நாட்களுக்குள் இணைச்சு விடுங்க! கால அவகாசம் வரும் 31ம் தேதியோடு முடியுது….

 

பான் எண்ணை ஆதாருடன் இன்னும் 25 நாட்களுக்குள் இணைச்சு விடுங்க! கால அவகாசம் வரும் 31ம் தேதியோடு முடியுது….

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக கால அவகாசம் வரும் 31ம் தேதியோடு நிறைவடைகிறது. அதனால் இதுவரை பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்கள் வரும் 25 நாட்களுக்குள் அந்த வேலையை முடிச்சு விட்டுங்க. இல்லைன்னா பான் எண் செல்லாதாகி விடும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த பான் (நிரந்த கணக்கு எண்) கார்டு  தற்போது வங்கியில் கணக்கு தொடங்க, விலையுயர்ந்த பொருட்களை வாங்க என பல்வேறு விஷயங்களுக்கு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பான் கார்டு பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பான் கார்டை வருமான வரித்துறை வழங்கி வருகிறது. 

பான் கார்டு

பான் எண்ணை ஆதாருடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய உத்தரவிட்டது. மேலும் அதற்கு பல முறை காலஅவகாசம் வழங்கியது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் இறுதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என 6வது முறையாக அவகாசம் வழங்கியது. இல்லையென்றால் ஆதாருடன் இணைக்காத பான் கார்டு செல்லாதாகி விடும் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அந்த கால அவகாசம் முடிவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன் மீண்டும் ஒரு முறை பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலஅவகாசத்தை மத்திய அரசு நீடித்தது.

ஆதார் கார்டு

அதாவது டிசம்பர் 31ம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை கால அவகாசம் நீடிக்கப்பட்டது. அதன்படி, இன்னும் 25 நாட்களுக்குள் இதுவரை பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்கள் இணைத்து விடுங்க. இல்லைன்னா ஆதாருடன் இணைக்காக பான் கார்டுகள் 2020 ஜனவரி 1 முதல் செல்லாதாகி விடும் ஆபத்து உள்ளது.