பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. 

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. 

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய போன்றவற்றுக்கு பான் எண் அவசியம். இந்த பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் அதற்கான காலக்கெடுவை பலமுறை நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த மத்திய பட்ஜெட்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுக்கு பதிலாக ஆதாரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்தது.

பான், ஆதார்

மேலும் ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகள் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்.30ஆம் தேதியுடன் அவகாசம் முடியும் நிலையில் டிச.31 வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது.